அண்ணா
பல்கலைகழக நண்பர்களே
நமக்கு தேவை "FIRST MARK இல்ல PASS MARK"
“FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION”
என்ற பொன்மொழிக்கு ஏற்ப முதல் பக்கத்தில் உள்ள 2 மார்க் கேள்விகளுக்கு அதிக
கவனம் செலுத்தி விடையளிக்க வேண்டும். 16 மார்க் கேள்விகளை முதலில் எழுதிவிட்டு 2
மார்க் எழுத நேரம் இல்லை என்று விட்டு விடுவதுதான் அதிகம் அரியர் விழுவதன் காரணம். 2 மார்க்
கேள்விகளுக்கு எழுதும் பதில் 2 வரியில் இருக்க கூடாது, அதற்கும் சைடு
ஹெட்டிங் போட்டு எழுத வேண்டும்.
எடுத்துக்காட்டாக, WHAT IS COMPUTER? என்ற கேள்விக்கு 2 வரியில் பதில் அளித்தால் போதும் என்று நினைக்க கூடாது.
ஒவ்வொரு கேள்விக்கும்
v DEFINITION
v DIAGRAM
v PROGRAM
v EXAMPLES
என்று ஹெட்டிங் போட்டு அழகாக
எழுதினால் மார்க்கை குறைக்க யாருக்குதான் மனம் வரும்.
30 நிமிடங்களில் 10 சிறு வினாக்களுக்கு முழுமையான பதில் தெரியவில்லை என்றால்
கேள்வி சம்மந்தமாக KEY வார்த்தைகளையாவது எழுதுங்கள்.
அடுத்தது 16 மார்க் வினாக்கள்:
3 வினாக்களுக்கு மட்டும் பதிலளித்தால் போதும் பாஸ் ஆகிவிடலாம் என்ற எண்ண்ம்
மாணவர்களிடம் பரவலாகவே உள்ளது, இது மிகவும் தவறு. சரியோ?,தவறோ?, தெரியுதோ?,தெரியலையோ? கண்டிப்பாக அனைத்து
வினாக்களையும் அட்டன் பன்ன வேண்டும். அப்படி செய்தால்தான் ஒருவேளை வினாக்கள் OUT OF SYLLABUS ஸாகவோ? அல்லது வினாக்களில் பிழையேதும் இருந்தாலோ? நமக்கு GRACE மார்க் கிடைக்கும்.எனவே எந்த வினாக்களையும் விட்டு
விடாதீர்கள்.
கேள்வி தேர்வு செய்வது மிகவும் முக்கியம். அதிகம் படங்கள் உள்ள வினாக்களையே
தெர்வு செய்து எழுத வேண்டும். நன்றாக
தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். நன்றாக தெரியும் என்பதற்காக
ஒரே கேள்வியை ஒரு மணி நேரம் 7 பக்கத்திற்கு எழுத கூடாது.
8 மார்க் கேள்விகளுக்கு 16 மார்க் கேள்விபோல் எழுவிட்டு மற்ற கேள்விகள் எழுத
நேரம் இல்லை என்று புலம்பாதீர்கள். கேள்வி எண்ணை மறந்து விட வேண்டாம் புலவரே....
விடை தெரியாத வினாக்களை கண்டு பதற்றம் வேண்டாம். பதிலை விட PRESENTATION தான் மிகவும்
முக்கியம், பாஸ் பன்ற அளவிற்கு எழுதினேன் ஆனால் அரியர் விழுந்து விட்டது என நம்மில் பலர்
புலம்ப கேட்டிருக்கிறேன். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே நமது அண்ணா
பல்கலைகழகத்தை, S GRADE வரும் என்ற நம்பிக்கையில் இருப்பவனுக்கே இங்கு D, E
GRADE தான் வருகிறது. நம்ம பாஸ் ஆகி விடுவேன் என்று வந்தால் அரியர் தான்
கிடைக்கும். உயர்ந்த எண்ணங்களை மனதில் கொண்டு, மேற்கூறிய அனைத்து TIPS களையும் கருத்தில் கொண்டு தேர்வு எழுதுங்கள்,
நிச்சயம் வெற்றி நமதே!
உங்கள் படிப்பிற்கு தேவையான அனைத்து STUDY MATERIALS ம் எங்கள் WEBSITE ல் உள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யவும்.
எட்டிப்பிடிக்கும் உயரத்தில் நம்
வெற்றி இல்லை!
அதை விட்டுவிடும்
எண்ணத்தில் நாமும் இல்லை..!
Blogger Comment
Facebook Comment